கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!
#SriLanka
#Train
Dhushanthini K
8 months ago

தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெமோதர சவுதாம தோட்டத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



