இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர்

#SriLanka
Mayoorikka
8 months ago
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர்

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.

 அதன்படி அவர் இன்று அதிகாலை 02.55 மணியளவில் கட்டார் ஏர்வேஸின் QR-662 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன், டொனால்ட் லுவுடன் நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 இதேவேளை நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல் மற்றும் மக்கள் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதே டொனால்ட் லுவின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் டிசம்பர் 10ஆம் திகதி வரை இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!