இலங்கையில் சமீபகாலமாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்!

#SriLanka
Dhushanthini K
8 months ago
இலங்கையில் சமீபகாலமாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்!

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில், சுமார் 68 சதவீதம் பேர் இந்த நோயை மற்றொரு நபருக்கு பரப்பக்கூடியவர்கள் என்பதும் இனங்காணப்பட்டுள்ளது. 

மேலும், அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதுடன், 115 பேர் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் 113 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!