மாவீரர் தினத்தில் 10 இடங்களில் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!
#SriLanka
#LTTE
Thamilini
1 year ago
வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் வைபவங்களில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நவம்பர் 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் வடக்கில் 244 இடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும், அவற்றில் 10 இடங்களில் மட்டும் விடுதலைப் புலிகளின் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிசார் இது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்." எனக் கூறியுள்ளார்.