யாழில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய படகு : மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 மில்லியன் பெறுமதியான கஞ்சா!
#SriLanka
#Jaffna
Dhushanthini K
8 months ago

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் இன்று (4.12) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 188 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் ஏழு பயணப் பொதிகளில் இந்த கேரள கஞ்சா கையிருப்பு இருந்ததாகவும், அதன் பெறுமதி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகுமேலதிக சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



