நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள்! ஆபத்தில் நோயாளர்கள்

#SriLanka
Mayoorikka
8 months ago
நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள்! ஆபத்தில் நோயாளர்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அவசரகால கொள்வனவுகளில் 40 சதவீதமானவை இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளை உள்ளடக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

 பல மருத்துவமனை பணிப்பாளர்கள் மருந்து ஆய்வுக் கூட்டங்களில் சுகாதார தலைமை அதிகாரிகளுக்கு இந்த புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான மறுபதிவு மற்றும் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, தலைமை நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக விலைகளை ஒழுங்குபடுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மருந்து உற்பத்தியை ஒரு தொழிலாகக் கொண்ட நாடுகளில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த தனி சுயாதீன நிறுவனமும், மருந்துகளின் தரத்தை ஒழுங்குபடுத்த பல தனி நிறுவனங்களும் உள்ளன. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானவிடம் நாம் கேட்டபோது, ​​அவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

 இன்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மாபியாக்களின் தலைமையகமாக மாறியுள்ளதாகவும், அதன் நிர்வாகிகள் சொத்தை அபகரித்த கும்பலாக நடந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.

 பெல்லானா மேலும் கூறுகையில், மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் பணம் வசூலித்தாலும், பணத்திற்கு ஏற்ற வகையில் சேவைகளை வழங்குவதில்லை என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!