அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

#SriLanka #America #Trump
Mayoorikka
1 month ago
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 47வது ஜனாதிபதியாக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

 இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

 ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. 

வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது. 

47ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி. “இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.

 அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். “அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது.

 என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!