ஹேமசிறி மற்றும் பூஜித்தவுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆரம்பம்

#SriLanka #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
ஹேமசிறி மற்றும் பூஜித்தவுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சாட்சியங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.


செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4