கல்முனையில் இருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து : ஒருவர் பலி!
#SriLanka
#Accident
Dhushanthini K
9 months ago

கல்முனை சாய்ந்தமருதில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்று(1) இரவு 08 மணியளவில் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் சோமர்செட் வத்தை பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லாரியின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



