சில ரயில் சேவைகள் தாமதமாகலாம்!
#SriLanka
#Train
Thamilini
1 year ago
ருஹுனு குமாரி புகையிரதம் கிந்தோட்ட நிலையத்தில் தடம் புரண்டதன் காரணமாக சமுத்திராதேவி புகையிரதம் தொடந்துவ நிலையத்திலிருந்தும், சகரிகா புகையிரதம் புஸ்ஸ நிலையத்திலிருந்தும் நயனகுமாரி ரயில் ஹிக்கடுவ நிலையத்தில் இருந்தும் புறப்பட்டுச் சென்றன.
குறித்த ரயில் நிலையங்களில் இருந்து குறித்த நேரத்திற்கு ரயில்கள் பயணிக்கத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், காலி குமரி புகையிரதமும் தபால் புகையிரதமும் தாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட ருஹுனு குமாரி ரயிலின் இயந்திரம் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரதத்தை சீரமைக்க இன்னும் சில மணித்தியாலங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.