மும்முரமாக இன்றும் தொடரும் தபால் மூல வாக்களிப்பு!
#SriLanka
Dhushanthini K
9 months ago

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் இரண்டாவது நாளான இன்று (01) மும்முரமாக வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் வாக்குகளை குறிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தபால்மூல வாக்களிப்பில் அடையாளமிட முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால்மூல வாக்களிப்பை குறிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.



