மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!
#SriLanka
Thamilini
1 year ago
மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன பண்ணை பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று (31) பிற்பகல் மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின்புறமுள்ள அஸ்திவாரம் வெட்டுவதற்கு தந்தையும் சகோதரனும் உதவிக் கொண்டிருந்த போதே குறித்த சிறுமி விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சகோதரரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தந்தைக்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பதுடன் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.