நாட்டின் பல மாவட்டங்களில் 75 மி.மீற்றர் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
Thamilini
1 year ago
வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தீவின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான சாதகமான தன்மைகள் இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.