மறைந்த ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி

#Death #France #President #Bussinessman #condolence #Tata
Prasu
10 months ago
மறைந்த ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரட்டன் டாடாவின் மறைவு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.

அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.

 அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!