கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி!
#SriLanka
#Colombo
Thamilini
1 year ago
கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவன் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரா ஏரி அமைந்துள்ள பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த பகுதி ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.