யாழில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!
#SriLanka
Mayoorikka
1 hour ago
யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நேற்றுமாலை நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கொக்குவில் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்ணை கடலில் நால்வர் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்கள் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
