இலங்கைக்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி!

#SriLanka
Dhushanthini K
10 months ago
இலங்கைக்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் சுற்றுலா, எரிசக்தி மற்றும் சிறுதொழில் கைத்தொழில்களின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளை வழங்க இணங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே இத்தீர்மானத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை செய்துள்ள அனைத்து உடன்படிக்கைகளும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, சுற்றுலாத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுகளை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது.

வடக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோ தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையில் எரிசக்தி மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்குவதற்கும், நிதித்துறையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!