பிரான்ஸில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய திட்டம்!
#SriLanka
#France
Thamilini
1 year ago

குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வரம்பு எல்லை ஒன்றை உருவாக்குவேன் என பிரதமர் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
'குடியேற்றத்தையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கும் தேவையான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், 'தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
'விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர் போன்ற முன்மாதிரியாக திகழ்பவர்கள் என இந்த வரையறை உருவாக்கப்படும். குடியேற்றம் என்பதில் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்!' எனவும் பிரதமர் மிஷேல் பார்னியர் தெரிவித்தார்.



