பரபரப்பாகும் தேர்தல் களம் : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் களமிறங்கும் தமிழரசு கட்சி!
#SriLanka
Thamilini
1 year ago
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக் குழு கூடி, அந்தத் தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அதேநேரம், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.