கல்பிட்டியில் பீப்பாயில் விழுந்து உயிரிழந்த குழந்தை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 hours ago
கல்பிட்டி, முசல்பிட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றுமாத பெண் குழந்தை, தண்ணீர் நிரம்பிய பீப்பாயில் விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிறுமியின் தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பீப்பாயில் இருந்திருக்கலாம் என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தாய், தனது மகள் வீட்டில் இல்லாததை அவதானித்து தேடியபோது உயிரிழந்த சிறுமியை கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி பொலிஸார் இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
