மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்க மாட்டார்கள் - தேரர்!

#SriLanka #Vote
Thamilini
1 year ago
மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்க மாட்டார்கள் - தேரர்!

மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகார இணைப்பாளர் வண. கலாநிதி சஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் இனவாதம், மத பிளவுகள், தொடர்ச்சியான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். 

 "தற்போது, ​​நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மோசமடைந்து வருகின்றன. எனவே, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை முயற்சியின் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சங்கம் முடிவு செய்துள்ளது  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த மதத்தையும் நம்பாத, கோவில்கள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளுக்குச் செல்லாத ஒரு குழுவினர் நாட்டில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்காக நின்றவர்கள். அவர்களின் தவறான கருத்துக்களால் உண்மையான மத பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்," என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!