வெலிகமயில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயது இளைஞர் கைது

#SriLanka #Arrest #drugs
Prasu
10 months ago
வெலிகமயில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயது இளைஞர் கைது

வெலிகம, பெலியான பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இன்று (02) காலை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிதிகம, இப்பவல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது 1 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது, ​​அந்த இடத்தில் இருந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!