அனுர வழங்கிய உர மானியத்தை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

#SriLanka #Sri Lanka President #Election Commission #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
அனுர வழங்கிய உர மானியத்தை  இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

பெரும்போகத்தின் போது, விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

 பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!