மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் வெலிவேரிய பிரதேசத்தில் கைது!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் வெலிவேரிய பிரதேசத்தில் கைது!

வெலிவேரிய பிரதேசத்தில் மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ஜனித் மதுசங்க அல்லது "பொடி லேசி" மற்றும் மெட்டியகொட தசுன் ராஜகருணா ஆகியோரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பல வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாகி, வெளிநாடுகளின் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி மேலும் பல குற்றச்செயல்களுக்கு இவர் தயாராகி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 46 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

 இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள், மேகவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

 சந்தேகநபரிடம் இருந்து 38 மில்லி மீற்றர் தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் சிஷ்யரான "தொட்டலக சான" என்பவருடன் சந்தேகநபர் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!