163 பாதுகாவலர்கள் தேவை : அநுரவிற்கு கடிதம் அனுப்பிய ரணில்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, அந்த கடிதத்தில் ரணில் விக்ரமசிங்க கோரிய பாதுகாவலர்களின் எண்ணிக்கை 163 ஆகும். மேலும், 15 சமையல்காரர்கள், 6 மருத்துவ அதிகாரிகள், ஒரு கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவையும் கோரப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அகற்றுவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ள சூழலில், ரணில் விக்ரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.