பாடசாலை நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது! கல்வி அமைச்சு அறிவிப்பு

#SriLanka #School #Ministry of Education
Mayoorikka
1 year ago
பாடசாலை நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது! கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!