பதவி விலகல் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!

#SriLanka #Central Bank
Mayoorikka
1 year ago
பதவி விலகல் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 அரசாங்கமொன்று மாறியதற்காக சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி ஆளுநரும் நிதிச் சபையும் மாற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நிதிச் சபையின் உறுப்பினர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பதவி விலகலாம், எனினும் பொதுவாக அவ்வாறு பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 புதிய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் நிதிச்சபை மற்றும் ஆணையாளர் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 பதவிக் காலத்தில் உச்ச அளவில் சேவையை வழங்கும் பொறுப்பு தமக்கு உண்டு என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!