அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள்
#SriLanka
#vehicle
Mayoorikka
1 year ago
கடந்த அரசாங்கத்தின்போது அமைச்சர்கள் உட்பட அரச அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள், விசாரணைகளின் பின்னர் மீண்டும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய 59 அரச நிறுவனங்களுக்குக் குறித்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின்போது, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பயன்படுத்திய பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலும் இலங்கை மன்றக்கல்லூரிக்கு அருகிலும், காலி முகத்திடல் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.