குடும்பத் தகராறில் இளைஞர் ஒருவர் கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மவுண்ட் பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (11.09) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்மலானை பொருபனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.