ஐ.நா சபையின் 57ஆவது கூட்டத்தொடர் இன்று : இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஐ.நா சபையின் 57ஆவது கூட்டத்தொடர் இன்று : இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று (09.09) ஆரம்பமாகிறது.  

அதேவேளை இன்றையதினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது .

இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.  

இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதான அமர்வில் இன்றையதினம் விவாதம் நடைபெறவுள்ளது.  

இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. எனவே, இது விடயத்தில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதனிடையே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கைவிடும்படி இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என்று தெரிய வருகின்றது. தற்போது நாட்டில் தேர்தல் நடப்பதால் மனித உரிமைகள் விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டுவிடும் என்றும் மீண்டெழும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இலங்கை கூறியுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும், இலங்கை தொடர்பில் ' இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.  

இதேவேளை இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க பதிலளித்து உரையாற்றுவார். அதேவேளை அவர்,விவாதங்கள் மற்றும் பக்க நிகழ்வுகளிலும் பங்குபற்றுவார் என்றும் தெரிய வருகின்றது.

இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!