மஹிங்கல பகுதியில் திடீரென தீப்பிடித்த வாகனங்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மஹிங்கல, பாதுக்க பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.
ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் வந்த போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தாரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்ததா, மற்றைய வாகனமும் தீப்பிடித்ததா என்பது இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.