ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் மஸ்கின் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் மஸ்கின் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

SpaceX இன் செயற்கைக்கோள் பிரிவான Elon Musk's Starlink இன் செயற்பாடுகளை அமைக்கும் இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. 

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ‘Starlink’ இற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் முன்னதாக அறிவித்திருந்தார். 

இது தவிர  எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை நாட்டில் செயல்பட அனுமதிக்கும் வகையில், பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தங்களை செவ்வாயன்று நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. 

28 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவை வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

 திருத்தங்கள் மூன்று புதிய வகையான உரிமங்களை அறிமுகப்படுத்தி, உரிமம் பெற்ற சேவை வழங்குநராக இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் நுழைவதற்கு Starlink ஐ அனுமதிக்கிறது. 

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இது சாத்தியமற்றது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வதற்கான அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க இலங்கையர்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளனர். ஸ்டார்லிங்க் தொடங்கப்பட்டதும், எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். தவிர, ஸ்டார்லிங்குடன் ஜூம் சந்திப்புக்கு அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!