இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 672 பேர் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
10 months ago

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 664 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 22 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 16 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 165 கிராம் 736 மில்லி கிராம் ஹெரோயின், 211 கிராம் 79 மில்லி கிராம் ஐஸ், 2,151 கஞ்சா செடிகள் மற்றும் 612 கிராம் 795 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



