இலங்கை பொலிஸாரின் 158 ஆவது பொலிஸ் நினைவு தினம் இன்று!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

இலங்கை பொலிஸாரின் 158 ஆவது பொலிஸ் நினைவு தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆண்டு நிறைவை ஒட்டி தொடர் சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



