சஜித்தை ஆதரிக்கும் திட்டத்தை ஏற்க முடியாது! சிறிதரன் திட்டவட்டம்

#SriLanka #Sajith Premadasa #sritharan
Mayoorikka
1 year ago
சஜித்தை ஆதரிக்கும் திட்டத்தை ஏற்க முடியாது! சிறிதரன் திட்டவட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

 தற்போது இலண்டனில் தங்கி நிற்கும் அவர், கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

 கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக நல்லூர் தேர்த்திருவிழா தினத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!