தமிழசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை செயற்படுத்துவோம்: மாவை திடீர் பல்ட்டி

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தமிழசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை செயற்படுத்துவோம்: மாவை திடீர் பல்ட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்போம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 யாழில் இன்று நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

 சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை.

 ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் – என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!