நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் திட்டம் இல்லை : நாமல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் திட்டம் இல்லை : நாமல்!

நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் தன்னிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

பியகமவில் நேற்று (30.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியல் இலக்கு கொண்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அல்ல. இந்த தாய்நாட்டின் மண்ணில் கால் பதிக்கும் பெற்றோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நாம் செய்யும் கொள்கைகள். 

நாங்கள் முன்வைக்கும் திட்டத்தில் இந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த சட்டமும் இல்லை, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் எந்த ஒரு வேலைத்திட்டமும் இல்லை, மக்களின் நலனுக்காகக் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் மட்டுமே உள்ளன என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!