PAYE வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
PAYE வரி திருத்தம் தொடர்பில்  ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

PAYE வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அஹலியகொடவில் இன்று (28.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "இன்னொரு பிரச்சனை நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரி. அதுவும் ஒரு பெரிய பிரச்சனை. ஐஎம்எப் மற்றும் நாங்களும் அதை திருத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். 

அடிப்படை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு முன்மொழிவைச் செய்துள்ளோம், அவர்கள் மற்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளனர். எனவே இந்த இரண்டு முன்மொழிவுகளும் விவாதிக்கப்பட்டன, நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியதும், சரியான தொகையை இங்கே அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!