ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரித்தானியர்கள் எளிதாக நுழைய நிதி ஒதுக்கீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பிரித்தானிய மக்கள் எளிதாக நுழைய 10.5 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு, Brexit-க்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரித்தானிய குடிமக்கள் செல்வதை எளிதாக்கவும், ஆவண சோதனைகளை சீராக்கவும் 10.5 மில்லியன் பவுண்டுகளை செலவிடவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மே மாதத்தில் இருந்து புதிய நுழைவு மற்றும் வெளியேறும் முறைமையை அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம், பிரித்தானிய பயணிகள் தங்கள் முகம் மற்றும் விரல் ரேகையை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.இந்த முறைமையை நடைமுறைப்படுத்த, பிரித்தானிய அரசு முக்கியமான துறைமுகங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்யவுள்ளது.