மனைவியின் பிரிவால் கணவன் செய்த விபரீத செயல் : தமிழர் பகுதியில் சம்பவம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மனைவியின் மரணத்தினால் மனவேதனை அடைந்த யாழ்ப்பாணம் நாவற்குழியைச் சேர்ந்த ஆண் ஒருவர் நேற்று (27.08) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனுவல் சூசைமுத்து என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த நபரின் மனைவி சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், குறித்த நபர் தனது மனைவியின் மரணத்தையடுத்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.