ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29.08) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

புலவன் ஸ்ரீலங்கா என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் சென்று படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது “புலுவன் இலங்கை” கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த இலங்கை படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!