இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ள இந்திய கடற்படையின் போர்க்கப்பல்!
#India
#SriLanka
#worship
Mayoorikka
11 months ago

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாட்டு விஜயமாகவே இவ்விஜயம் அமைகின்றது.
இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ்விஜயத்தின்போது கிடைக்கப்பெறுவதுடன், நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதேபோல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஐஎன்எஸ் மும்பை கப்பல் 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது



