திஹாரியவில் உள்ள 03 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து!
#SriLanka
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கொழும்பு-கண்டி பிரதான சாலையில், நிட்டம்புவ, திஹாரியவில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சாதனங்களை விற்பனை செய்யும் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கம்பஹா தீயணைப்புப் படையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுமார் 30 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
