விவசாயிகளின் கடன்கள் முற்றாக தள்ளுபடி செய்யப்படும் - சஜித்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

தமது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளின் கடன்கள் முற்றாக தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகளின் நெல்லுக்கு உயர் உத்தரவாத விலை வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹிகுரகொட நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், உளுந்து விலை நீக்கப்பட்டு, விவசாய ரசாயனங்களை மலிவு விலையில் விவசாயிகள் வாங்க முடியும் எனக் கூறினார்.



