வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட தயாராகும் அரசாங்கம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26.08) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாக அமைச்சர் கூறுகிறார்.
வரி பாக்கியை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதன்படி, திங்கட்கிழமை (26.08) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



