வன்னிமாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வன்னிமாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்தார்.  

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 

அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னார் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அத்துடன் 13389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் 228 தபால்வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

சாதாரண வாக்குஎண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால்வாக்குகள் எண்ணுவதற்காக10 நிலையங்களும் எனமொத்தமாக 37வாக்குஎண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!