கிளிநொச்சியில் வறிய குடும்பத்தினருக்கு புதிய வீட்டை கையளித்த இராணுவத்தினர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் உள்ள வறிய குடும்பம் ஒன்றுக்கு 12 இலட்சம் மதிப்புள்ள வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் நிதியில் இருந்து நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு இராணுவ தளபதி விக்கும் லியனகேவால் இன்று (25.08) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.