யுக்திய நடவடிக்கை - 623 பேர் கைது
#SriLanka
#Arrest
#Police
Prasu
11 months ago

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 198 கிராம் 737 மில்லி கிராம் ஹெரோயின், 228 கிராம் 26 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 2,538 கிராம் 657 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



