அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! பெப்ரல்
#SriLanka
#Election
#Paffrel
Mayoorikka
11 months ago

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவற்றை வழங்க முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



