இலங்கையில் விநியோகத்தினை ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்!

#SriLanka #Australia #Fuel
Mayoorikka
1 year ago
இலங்கையில் விநியோகத்தினை ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்!

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

 இந்நிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், 20 நிரப்பு நிலையங்கள் வழியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளது. முன்னதாக, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட். 

 இலங்கை சந்தையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன், 2024 ஜூன் 4 அன்று ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டது. 

 இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 150 நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்துக்காக, யுனைடெட் பெட்ரோலியத்தை அனுமதித்துள்ளது.

 அத்துடன் மேலும் 50 புதிய நிலையங்களை, அமைக்கவும் குறித்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!